Twitter

Follow palashbiswaskl on Twitter

Sunday, April 7, 2013

யாழில் சிறுமி கடத்தல் முறியடிப்பு

யாழில் சிறுமி கடத்தல் முறியடிப்பு


யாழ்.பஸ் நிலையத்தில் வைத்து நான்கு வயது சிறுமியொருவரை கடத்திச் செல்ல முயற்சித்த சம்பவம் ஒன்றும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, கடத்திச் செல்ல முற்பட்ட இளைஞர் யாழ்.பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பிலிருந்து அச்சுவேலியிலுள்ள தனது உறவினரை பார்ப்பதற்கு இரண்டு பெண் பிள்ளைகளும் அவர்களது பெற்றோரும் பஸ்ஸில் வந்திறங்கியுள்ளனர்.

வந்து இறங்கியவர்கள் பிள்ளைகளை பஸ்ஸில் இருந்து இறக்கி பஸ்ஸின் அருகில் நிறுத்தி விட்டு, தமது பொருட்களை பஸ்ஸில் இருந்து கீழே இறக்கி கொண்டிருந்துள்ளனர்.

இதன்போது அவ்விடத்திற்கு வந்த இளைஞர் ஒருவர் சிறுமியுடன் தந்திரமாக பேசி பஸ் நிலையத்திற்கு பின்புறமாக அழைத்துச் செல்ல முற்பட்டுள்ளார். இதனைக் கண்ட தாய் அபயக்குரல் எழுப்பியுள்ளார்.

இதன்போது பஸ் நிலையத்தில தரித்திருந்த பொலிஸார் குறித்த இளைஞரை துரத்தவே அவர் தப்பியோடிய போதும் பழைய தபாற் கந்தோர் வீதியில் வைத்து அவரை மடக்கி பிடித்தனர்.

குறித்த சிறுமி எந்த விதமான ஆபத்துக்களுமின்றி பத்திரமாக காப்பாற்றப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Welcome

Website counter

Followers

Blog Archive

Contributors