Twitter

Follow palashbiswaskl on Twitter

Saturday, April 6, 2013

இனியும் கேவலப்பட என்ன இருக்கிறது!

இனியும் கேவலப்பட என்ன இருக்கிறது!


இனியும் கேவலப்பட என்ன இருக்கிறது!

அவமானம் 1: கடந்த வாரம் அமெரிக்காவை சேர்ந்த எம்.பி.க்கள், தொழிலதிபர்கள் என்று 18 பேர் கொண்ட குழு குஜராத் வந்தது. அவர்கள்  முதல்வர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியதோடு அவருடைய நிர்வாக திறமையை பாராட்டினர். இதானால் அமெரிக்காவுக்கு மோடிக்கு விசா கிடைக்கும் என்று நம்பப்பட்டது.

இதானால் மீண்டும் நம்பிக்கையோடு அமெரிக்கா விசா  கேட்டு விண்ணப்பித்தார் மோடி. ஆனால் அமெரிக்க மோடியின் முகத்தில் கரியை  பூசியது. குஜராத் இனப்படுகொலை குற்றவாளியான மோடிக்கு விசா  வழங்கும் நடைமுறையில் எந்த மாற்றத்துக்கும் இடமில்லை என்று மீண்டும் அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்தது. மீண்டும்அவமானப்பட்டார் மோடி. 

அவமானம் 2: இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், சில தினங்களுக்கு முன் டெல்லி வருகை தந்தார். இவரது தந்தை குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். அதனால் சுனிதா குஜராத்தில் பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொள்வதாக இருந்தது.

இவர் குஜராத் விமான நிலையத்தில் வந்திறங்கியதும் இவரை அழைக்க முதல்வர் மோடி சார்பாக அரசு வாகனம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மோடியின் அரசு மரியாதையை ஏற்க மறுத்து புறக்கணித்தார். மேலும் இவரை எப்படியாவது மோடியை சந்திக்க வைக்க அரசு துறையால் பல்வேறு முயற்ச்சிகள் செய்யப்பட்டன ஆனால் அனைத்தையும் புறக்கணித்து  மோடியின் முகத்தில் கரியை  பூசினார். 

சிந்திக்கவும்: குறுக்கு வழியில் பிழைப்பு நடத்தும் திருட்டு உலகமடா தம்பி புரிந்து நடந்து கொள்ளடா என்கிற பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. மோடியும் தான் செய்த இனப்படுகொலை குற்றங்களை மறைத்து பிரதமர் வேடம் போடலாம் என்ற கனவில் குறுக்கு வழியில் பல்வேறு காரியங்களை நிகழ்த்தி பார்கிறார். ஒன்றும் நடக்க மாட்டேன்கிறதே! 


குறிப்பு: அமெரிக்கா விசாவுக்கு பல்வேறு முறை விண்ணப்பித்தும் கிடைக்க வில்லை. பிறகு அமெரிக்க குழு ஒன்றை வரவழைத்து அவர்கள் மூலம் ஏதாது செய்ய முடியுமா என்று முயற்சித்தார். அதுவும் முடியவில்லை.

பிறகு அமெரிக்க விண்வெளி வீராங்கனையை தனது அரசு விருந்தினராக்கி உபசரித்து அமெரிக்காவிடம் நல்ல பெயர் வாங்கலாம் என்று பார்த்தார் அதுவும் முடியவில்லை. அமெரிக்க விசாவுக்கு ஏன்தான் இவர் ஆளாய் பறக்கிறாரோ தெரியவில்லை. 

ஏன்தான் இவருக்கு இந்த அமெரிக்க மோகமோ. ஆமா எங்கே பேனது இவரது தன்மானம், சுதேசி கொள்கை எல்லாம், பாரத் மாதாகி ஜெ என்று காத்தோடு கலந்து விட்டதோ. அமெரிக்க விசாவில் என்ன தேன் வடிகிறதா? வந்தால்  மகாதேவி (அமெரிக்கா விசா) இல்லையேல் மரண தேவி என்று அடம் பிடிக்கிறாரே மோடி. 
*மலர் விழி*

இந்தியாவின் பொய் முகம்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Welcome

Website counter

Followers

Blog Archive

Contributors